ஊரக சிவன் கோவில் வளாகத்தில் உள்ள சிவன் சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில், ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று காலை ஶ்ரீலலிதா பரமேஸ்வரி சமேத ஶ்ரீ சந்திரமொலீஸ்வர சுவாமிகள் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.
அதன் தொடக்க நிகழ்வாக காலை 08.45 மணிக்கு சீர்வரிசையாக வெற்றிலை, பாக்கு, திருமாங்கல்யம், பழவகைகள் மற்றும் இனிப்பு வகைகள் ஊரக பெருமாள் சன்னதியில் வைத்து தீபாரதனை செய்யப்பட்டு, ஊரக மகளிரின் சீர்வரிசை ஊர்வலம் பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, சிவன் சன்னதி வந்தடைந்து சிவன் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறும்,
அதன் பின்னர் சுவாமி அம்பாள் சமேதராக ஆலய திருச்சுற்று மற்றும் ஊஞ்சல் சேவையும் தொடர்ந்து பிரசாத விநியோகமும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீலலிதா மரமேஸ்வரி சமேத ஶ்ரீ சந்திரமொலீஸ்வர சுவாமி அருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேதி : பின்னர் அறிவிக்கப்படும் நேரம் : காலை 09:00
உபயதாரர் குறைந்த பட்ச கட்டணம் ரூ 100/-
திருமாங்கல்யம், திருக்கல்யாண பிரசாதம், வஸ்திரம், புஷ்பம் மற்றும் இதர திருக்கல்யாண செலவினங்களுக்கான உபயம் வரவேற்கபடுகிறது.
