THIS PAGE IS UNDER DEVELOPMENT
துவக்க காலமும் ஸ்ரீவிநாயகர்மூர்த்தி பிரதிஷ்டையும்
ராணிப்பேட்டை பெல் நிறுவனம் நிறுவப்பட்ட தொடக்க காலத்தில், நிறுவன வளர்ச்சி மற்றும் ஊழியர்களின் நலனுக்காக, ஆன்மீக அன்பர்களின் மனதில் இறையருளால் நமது ஊரகத்தில் ஸ்ரீவிநாயகமூர்த்தியை பிரதிஷ்டை செய்வது என்ற எண்ணம் தோன்றியது. அதன்படி பழைய தபால் நிலையம் அருகிலுள்ள மரத்தடியில் ஸ்ரீவிநாயகர் மூர்த்தியை நிறுவ முடிவெடுத்தனர். அப்பொழுது நமது நிறுவனம், நமது வழிபாட்டிற்காக தற்பொழுது சிவன் கோவில் வளாகம் அமைந்துள்ள இடத்தில் இந்து கலாச்சார அமைப்பிற்கு இடம் ஒதுக்கீடு செய்தது, அதன்படி HR&CS என்ற அமைப்பை ஏற்படுத்தி ஸ்ரீவிநாயகர் மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு இறையருளால் 05/04/1985 அன்று ஶ்ரீகாஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன் முதல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அன்று முதல் ஒவ்வொரு மாதமும் சங்கடஹரசதுர்த்தி தினம் அன்று சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் மற்றும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சிவன் மற்றும் அம்பாள் சன்னதிகள் பிரதிஷ்டை
ஆன்மீக அன்பர்களின் மனதில் சிவன் சன்னதியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எழுந்தபோது அருகிலுள்ள லாலாபேட்டை பகுதியில் ஆன்மீக பயணமாக வந்த ஸ்ரீகாஞ்சி மகாபெரியவர் அவர்களுக்கு தங்குமிடமாக, தற்பொழுது ஸ்ரீமாரியம்மன் ஆலய வளாகம் அமைந்ள்ள இடத்தில் தற்காலிகமாக கூரை வேய்ந்து தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுசமயம் ஆன்மீக அன்பர்கள் ஸ்ரீகாஞ்சி மகாபெரியவர் அவர்களிடம் சிவன் சன்னதியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை பகிர்ந்து ஆலோசணை வேண்டினர்.
மகாபெரியவர் அவர்கள் கோவில் வளாகத்தைப் பார்வையிட்டு இந்த இடத்தில் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் மற்றும் ஸ்ரீலலிதாபரமேஸ்வரி சுவாமிகள் பிரதிஷ்டை செய்யுமாறு பணித்ததின் அடிப்படையில் அவர்களின் ஆசீர்வாதத்துடன் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் மற்றும் ஸ்ரீலலிதாபரமேஸ்வரி மூர்த்திகள் ஸ்ரீமயிலைகுருஜி அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு 24/06/1988 அன்று மஹா கும்பாபிஷேகம் ஶ்ரீகாஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன் சிறப்பாக நடைபெற்றது.
அன்று முதல் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷ காலத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்கார மஹா தீபாராதனைகள் மற்றும் பிரதோஷ மூர்த்தி ரிஷப வாகனத்தில் மூன்று முறை ஆலய திருச்சுற்று வரும் பொழுது பக்தர்களால் சிவபுராணம் ஓதுவதும் தனிச் சிறப்பாகும். குறிப்பாக சனிப்பிரதோஷ தினத்தன்று ஊரக பக்தர்கள் மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதி ஆன்மீக அன்பர்களும் கலந்து கொண்டு இறையருள் பெற்றுச் செல்கின்றனர் என்பது மற்றுமோர் சிறப்பாகும்.
மற்றும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் பிரதி வருடம் மஹா சிவராத்திரி அன்று மாலை 04.30 மணிக்கு 1வது கால அபிஷேகம், (அது சமயம் ஊரக மகளிர் கூட்டு நாமாவளியும்), உபயதாரர் சங்கல்பம், சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும். இரவு 09.00 மணிக்கு 2வது கால அபிஷேகம், (அது சமயம் ஊரக பக்தர்களால் தேவார திருமுறை பதிகங்களும்), உபயதாரர் சங்கல்பம், சிறப்பு அலங்கார மஹா தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும். இரவு 10.30 மணிக்கு 3வது கால அபிஷேகத்தின் பொழுது 108 முறை ருத்ரம் பாராய்யணம் செய்யப்படுகிறது. அது சமயம் பக்தர்கள் சிவன் மற்றும் அம்பாள் சன்னதியை 108 முறை வலம் வருவது சிறப்பாகும், அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்கார தீபாராதனை, உபயதாரர் சங்கல்பம், மஹா தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும். மற்றும் அதிகாலை 03.30 மணிக்கு 4வது கால அபிஷேகம், (அது சமயம் ஊரக பக்தர்களால் தேவார திருவாசக பதிகங்களும்), உபயதாரர் சங்கல்பம், சிறப்பு அலங்கார மஹா தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும், ஆகிய நான்கு கால பூஜைகளும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மற்றும் ஆண்டு தோறும் ஊரக சிவன் கோவில் வளாகத்தில் உள்ள சிவன் சன்னதியில் மாசி மாதத்தில், ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று காலை ஶ்ரீலலிதா பரமேஸ்வரி சமேத ஶ்ரீ சந்திரமொலீஸ்வர சுவாமிகள் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மற்றும் ஆண்டு தோறும் ஶ்ரீலலிதாபரமேஸ்வரி சமேத ஶ்ரீசந்திரமௌலீஸ்வரர் சுவாமிகளுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி அன்று அன்னாபிஷேகப் பெருவிழா சிறப்பாக நடைபெறும். அன்று மாலை 06.00 மணிக்கு,அன்னாபிஷேக சிறப்பு அலங்கார தீபாராதனை (அம்பாள் சன்னதியில் காய்கறிகளால் சாகம்பரி அலங்காரத்தில்) நடைபெறும், தொடர்ந்து மாலை 07.15 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் சுவாமிகளுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் பிரசாதமாக விநியோகமாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மற்றும் ஊரக சிவன் கோவில் வளாகத்தில் 108 சங்காபிஷேகம் நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு ஶ்ரீலலிதாமரமேஸ்வரி சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் சுவாமிகளுக்கு பிரதி வருடம் கார்த்திகை மாதம் 3வது சோமவாரம் (திங்கள்கிழமை) அன்று மாலை 06-15 மணிக்கு சிறப்பு ஹோமமும், தொடர்ந்து 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹாதீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மற்றும் ஊரக சிவன் கோவில் வளாகத்தில் உள்ள ஶ்ரீலலிதாபரமேஸ்வரி அம்பாள் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் ஆண்டு தோறும் நவராத்திரி விழாவை முன்னிட்டு 9 நாட்கள் தினமும் மாலை 06.30 மணிக்கு ஶ்ரீலலிதாபரமேஸ்வரி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மற்றும் மஹா தீபாராதனையும், தொடர்ந்து பிரசாத விநியோகமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
Extraordinary Experiences
Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, adipiscing elit.
Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Our Core Values
Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, adipiscing elit.
Locavit liberioris possedit
Diremit mundi mare undae
Spectent tonitrua mutastis