மாதாந்திர பூஜைகள்

பெல் ஊரக சிவன் ஆழத்தில் தினசரி நடைபெறும் பூஜைகள் தவிர மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சிகளாக இங்குள்ள ஒவ்வொரு சன்னதிகளுக்கும் உண்டான சிறப்பு தினங்களில் கீழே  உள்ள தகவல்கள் படி  சிறப்பாக நடைபெறுகிறது.

சங்கடஹர சதுர்த்தி

ஸ்ரீலலிதா பரமேஸ்வரி சமேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள ஶ்ரீஇரட்டைவிநாயகர் சன்னதியில் பிரதி மாதம் தேய்பிறை சதுர்த்தி அன்று மாலை 05.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும், அது சமயம் ஊரக மகளிர் கூட்டு நாமாவளியும் தொடர்ந்து உபயதாரர் சங்கல்பம், அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீவிநாயகப்பெருமான் திருவருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

             அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் மாலை 05.00 மணிக்குள்ளாக ஶ்ரீவிநாயகர் சன்னதியில் சேர்த்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்

நேரம் : மாலை 06:00

உபயதாரர்  கட்டணம் ரூ 50/-

பிரதோஷம்

 ஸ்ரீலலிதா பரமேஸ்வரி சமேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள சிவன் சன்னதியில் ஒவ்வொரு வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷ தினத்தன்று மாலை 04-30 மணிக்கு பிரதோஷ கால சிறப்பு அபிஷேகம் நடைபெறும், அது சமயம் ஊரக மகளிரின் கூட்டு நாமாவளியும் தொடர்ந்து, உபயதாரர் சங்கல்பம், அலங்கார மஹா தீபாராதனை, ஆலய திருச்சுற்று மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சிவன் அருள் பெருமாறு கேட்டுக் கொள்கிறோம். 

               அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் மாலை 04.00 மணிக்குள்ளாக சிவன் சன்னதியில் சேர்த்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நேரம் : மாலை 04:30

உபயதாரர்  கட்டணம் ரூ 50/-

தேய்பிறை அஷ்டமி

ஸ்ரீலலிதா பரமேஸ்வரி சமேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள ஶ்ரீகாலபைரவர் சுவாமிக்கு பிரதி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று மாலை 06-30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், அது சமயம் ஊரக மகளிர் கூட்டு நாமாவளியும் தொடர்ந்து உபயதாரர் சங்கல்பம், அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீகாலபைரவர் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் மாலை 06.00 மணிக்குள்ளாக ஶ்ரீகாலபைரவர் சன்னதியில் சேர்த்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நேரம் : மாலை 06:00

உபயதாரர் கட்டணம் ரூ 50/- 

பௌர்ணமி பூஜை

ஸ்ரீலலிதா பரமேஸ்வரி சமேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர் ஆலய வளாகத்தில் பௌர்ணமி பூஜை நிகழ்வாக பிரதி மாதம் பௌர்ணமி அன்று மாலை 06.15 மணிக்கு, ஸ்ரீலலிதா பரமேஸ்வரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அது சமயம் ஊரக மகளிர் கூட்டு நாமாவளியும், தொடர்ந்து அலங்காரம், உபயதாரர் சங்கல்பம், தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீலலிதா பரமேஸ்வரி அம்பாள் திருவருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

              அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் மாலை 06.00 மணிக்குள்ளாக ஸ்ரீலலிதா பரமேஸ்வரி அம்பாள் சன்னதியில் சேர்த்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நேரம் : மாலை 06:00

உபயதாரர்  கட்டணம் ரூ 50/-

கிருத்திகை பூஜை

ஸ்ரீலலிதா பரமேஸ்வரி சமேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள ஶ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமான் சன்னதியில் பிரதி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று காலை 09-30 மணிக்கு கிருத்திகை அபிஷேகமும், அது சமயம் ஊரக மகளிர் கூட்டு நாமாவளியும், தொடர்ந்து உபயதாரர் சங்கல்பம், அலங்கார தீபாராதனை,  மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீமுருகப்பெருமான் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

             அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் காலை 09.00 மணிக்குள்ளாக ஸ்ரீமுருகர் சன்னதியில்  சேர்த்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நேரம் : காலை 09:30

உபயதாரர்  கட்டணம் ரூ 50/-