வாராந்திர பூஜைகள்

பெல் ஊரக சிவன் ஆழத்தில் தினசரி நடைபெறும் பூஜைகள் தவிர வாராந்திர சிறப்பு நிகழ்ச்சிகளாக இங்குள்ள ஒவ்வொரு சன்னதிகளுக்கும் உண்டான சிறப்பு தினங்களில் கீழே  உள்ள தகவல்கள் படி  சிறப்பாக நடைபெறுகிறது.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி வழிபாடு

 ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி சன்னதியில் பிரதி வியாழக் கிழமை தோறும் காலை 06.45 மணிக்கு  அபிஷேகம், அலங்காரம், உபயதாரர் சங்கல்பம் மற்றும்  தீபாராதனை நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருவருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

                அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் காலை 06.30 மணிக்குள்ளாக ஸ்ரீதட்சிணாமூர்த்தி சன்னதியில் சேர்த்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நேரம் : காலை 06:30

உபயதாரர் கட்டணம் ரூ 50/-

ஸ்ரீசனீஸ்வரர் வழிபாடு

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஆலய வளாகத்தில் நவகிரக சன்னதியில் உள்ள ஸ்ரீ சனி பகவானுக்கு பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 06-30 மணிக்கு சிறப்பு அலங்காரம், உபயதாரர் சங்கல்பம்,  தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீசனீஸ்வர  திருவருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நேரம் : மாலை 06:30

உபயதாரர்  கட்டணம் ரூ 25/-

இராகு கால பூஜை

 ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீதுர்க்கை அம்மன் சன்னதியில் பிரதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும்,  அது சமயம் ஊரக மகளிர் கூட்டு நாமாவளியும் தொடர்ந்து, உபயதாரர் சங்கல்பம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு   ஸ்ரீதுர்க்கை அம்மன் திருவருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

             அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் காலை 10.00  மணிக்குள்ளாக ஸ்ரீதுர்க்கை அம்மன் சன்னதியில் சேர்த்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நேரம் : காலை 10:30

உபயதாரர் கட்டணம் ரூ 50/- 

ஸ்ரீகதிர்காமர் வழிபாடு

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீகதிர்காமர் சன்னதியில் பிரதி செவ்வாய் கிழமை தோறும் மாலை 06-30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், அது சமயம் ஊரக மகளிர் கூட்டு நாமாவளியும் தொடர்ந்து, உபயதாரர் சங்கல்பம், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கதிர்காமர் திருவருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  

         அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் மாலை 06.00 மணிக்குள்ளாக ஸ்ரீகதிர்காமர் சன்னதியில் சேர்த்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நேரம் : மாலை 06:30

உபயதாரர்  கட்டணம் ரூ 50/-

கிருத்திகை பூஜை

ஸ்ரீலலிதா பரமேஸ்வரி சமேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள ஶ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமான் சன்னதியில் பிரதி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று காலை 09-30 மணிக்கு கிருத்திகை அபிஷேகமும், அது சமயம் ஊரக மகளிர் கூட்டு நாமாவளியும், தொடர்ந்து உபயதாரர் சங்கல்பம், அலங்கார தீபாராதனை,  மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீமுருகப்பெருமான் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

             அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் காலை 09.00 மணிக்குள்ளாக ஸ்ரீமுருகர் சன்னதியில்  சேர்த்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நேரம் : காலை 09:30

உபயதாரர்  கட்டணம் ரூ 50/-