விநாயகர் சதுர்த்தி
ஊரக சிவன் கோவில் வளாகத்தில் உள்ள ஶ்ரீ இரட்டை விநாயகர் சன்னதியில் ஆண்டு தோறும் விநாயகர்சதுர்த்தி அன்று காலை 06.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும். அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து ஶ்ரீவிநாயகப் பெருமான் ஊரக திருவீதி உலாவும் நடைபெறும்.
மாலை 06.15 மணிக்கு ஶ்ரீவிநாயகப் பெருமானுக்கு சந்தனக் காப்பு அலங்காரத்தில் உபயதாரர் சங்கல்பம், மஹா தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீவிநாயகப்பெருமான் திருவருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தேதி : 27/08/2025 நேரம் : காலை 06:30
சந்தனக் காப்பு உபயதாரர் கட்டணம் ரூ 100/-
மஹாசிவராத்திரி
ஸ்ரீலலிதா பரமேஸ்வரி சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் பிரதி வருடம் மஹா சிவராத்திரி அன்று மாலை 04.30 மணிக்கு 1வது கால அபிஷேகம், (அது சமயம் ஊரக மகளிர் கூட்டு நாமாவளியும்), உபயதாரர் சங்கல்பம், சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும்.
இரவு 09.00 மணிக்கு 2வது கால அபிஷேகம், (அது சமயம் ஊரக பக்தர்களால் தேவார திருமுறை பதிகங்களும்), உபயதாரர் சங்கல்பம், சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும்.
இரவு 10.30 மணிக்கு 3வது கால அபிஷேகம், (ருத்ர ஜெபமும்), உபயதாரர் சங்கல்பம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை உபயதாரர் சங்கல்பம், சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும்.
அதிகாலை 03.30 மணிக்கு 4வது கால அபிஷேகம், (அது சமயம் ஊரக பக்தர்களால் தேவார திருவாசக பதிகங்களும்), உபயதாரர் சங்கல்பம், சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் வெகு சிறப்பாக நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீசந்திரமௌலீஸ்வரர் திருவருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அனைத்து விதமான அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் அந்தந்த அபிஷேக நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்னதாக ஆலயத்தில் சேர்த்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தேதி : 26/02/2025 நேரம் : மாலை 04:30
உபயதாரர் கட்டணம் ரூ 100/-
ஶ்ரீலலிதா பரமேஸ்வரி சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் திருக்கல்யாணம்
ஊரக சிவன் கோவில் வளாகத்தில் உள்ள சிவன் சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில், ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று காலை ஶ்ரீலலிதா பரமேஸ்வரி சமேத ஶ்ரீ சந்திரமொலீஸ்வர சுவாமிகள் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.
அதன் தொடக்க நிகழ்வாக காலை 08.45 மணிக்கு சீர்வரிசையாக வெற்றிலை, பாக்கு, திருமாங்கல்யம், பழவகைகள் மற்றும் இனிப்பு வகைகள் ஊரக பெருமாள் சன்னதியில் வைத்து தீபாரதனை செய்யப்பட்டு, ஊரக மகளிரின் சீர்வரிசை ஊர்வலம் பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, சிவன் சன்னதி வந்தடைந்து சிவன் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறும்,
அதன் பின்னர் சுவாமி அம்பாள் சமேதராக ஆலய திருச்சுற்று மற்றும் ஊஞ்சல் சேவையும் தொடர்ந்து பிரசாத விநியோகமும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீலலிதா மரமேஸ்வரி சமேத ஶ்ரீ சந்திரமொலீஸ்வர சுவாமி அருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேதி : பின்னர் அறிவிக்கப்படும் நேரம் : காலை 09:00
உபயதாரர் குறைந்த பட்ச கட்டணம் ரூ 100/-
திருமாங்கல்யம், திருக்கல்யாண பிரசாதம், வஸ்திரம், புஷ்பம் மற்றும் இதர திருக்கல்யாண செலவினங்களுக்கான உபயம் வரவேற்கபடுகிறது.
மார்கழி மாத (தனுர் மாத) பூஜை
ஊரக ஶ்ரீலலிதாபரமேஸ்வரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் சுவாமி சன்னதியில் மார்கழி மாத (தனுர்மாத) பூஜை நிகழ்ச்சியாக மார்கழி மாதம் முழுவதும் தினமும் காலை 04.50 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை, திருவாசகம் பாராயணமும்
காலை 05.15 மணிக்கு மஹா அபிஷேகமும், காலை 06.00 மணிக்கு உபயதாரர் சங்கல்பம் சிறப்பு அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து பிரசாத விநியோகமும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீலலிதாபரமேஸ்வரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் சுவாமிகள் திருவருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் காலை 05.00 மணிக்குள்ளாக சிவன் சன்னதியில் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேதி : 16/12/2025 நேரம் : காலை 04:30
உபயதாரர் கட்டணம் ரூ 100/-
ஆருத்ரா தரிசன வழிபாடு
பெல் ஊரக ஶ்ரீலலிதாபரமேஸ்வரி சமேத ஸ்ரீசந்திரமொலீஸ்வரர் ஆலய வளாகத்தில் ஶ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஶ்ரீ நடராஜர் மூர்த்தி மற்றும் ஶ்ரீமாணிக்கவாசக சுவாமிகளுக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்வாக மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் நாள் மாலை 06.30 மணிக்கு ஆருத்ரா சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மறுநாள் (திருவாதிரை அன்று) காலை மார்கழி மாத பூஜை முடிந்தவுடன் ஆருத்ரா தரிசனம் நிகழ்வாக சிறப்பு அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து ஶ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஶ்ரீ நடராஜர் மூர்த்தி மற்றும் ஶ்ரீமாணிக்கவாசக சுவாமிகளின் ஆலய திருச்சுற்று, மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீ நடராஜர் மூர்த்தி திருவருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் மாலை 06.00 மணிக்குள்ளாக சிவன் சன்னதியில் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேதி : பின்னர் அறிவிக்கப்படும் நேரம் : மாலை 06:00
உபயதாரர் கட்டணம் ரூ 100/-
அன்னாபிஷேகப் பெருவிழா
ஊரக சிவன் கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீலலிதாபரமேஸ்வரி சமேத ஶ்ரீசந்திரமௌலீஸ்வரர் சுவாமிகளுக்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாத பௌர்ணமி அன்று அன்னாபிஷேகப் பெருவிழா சிறப்பாக நடைபெறும். அன்று மாலை 06.00 மணிக்கு உபயதாரர் சங்கல்பம்,அன்னாபிஷேக சிறப்பு அலங்கார தீபாராதனை (அம்பாள் சன்னதியில் காய்கறிகளால் சாகம்பரி அலங்காரத்தில்) நடைபெறும்.
மாலை 07.15 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீலலிதாபரமேஸ்வரி சமேத ஶ்ரீசந்திரமௌலீஸ்வரர் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கும் பக்தர்கள் காலை 10.00 மணிக்குள் ஆலயத்தில் சேர்த்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் மாலை 07.00 மணிக்குள்ளாக சிவன் சன்னதியில் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேதி : 05/11/2025 நேரம் : மாலை 06:00
உபயதாரர் கட்டணம் ரூ 100/-
108 சங்காபிஷேகம்
ஊரக சிவன் கோவில் வளாகத்தில் 108 சங்காபிஷேகம் நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு ஶ்ரீலலிதாமரமேஸ்வரி சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் சுவாமிகளுக்கு பிரதி வருடம் கார்த்திகை மாதம் 3வது சோமவாரம் (திங்கள்கிழமை) அன்று மாலை 06-15 மணிக்கு சிறப்பு ஹோமமும், தொடர்ந்து 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரம், உபயதாரர் சங்கல்பம், மஹாதீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் சிறப்பாக நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் சுவாமிகள் திருவருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் மாலை 07.00 மணிக்குள்ளாக சிவன் சன்னதியில் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேதி : 01/12/2025 நேரம் : மாலை 06:00
உபயதாரர் கட்டணம் ரூ 100/-
நவராத்திரி விழா
ஊரக சிவன் கோவில் வளாகத்தில் உள்ள ஶ்ரீலலிதாபரமேஸ்வரி அம்பாள் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் ஆண்டு தோறும் நவராத்திரி விழாவை முன்னிட்டு 9 நாட்கள் தினமும் மாலை 06.30 மணிக்கு ஶ்ரீலலிதாபரமேஸ்வரி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, உபயதாரர் சங்கல்பம் மற்றும் மஹா தீபாராதனையும், தொடர்ந்து பிரசாத விநியோகமும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீலலிதாபரமேஸ்வரி அம்பாள் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நவராத்திரி விழா பிரசாதம், புஷ்பம் மற்றும் இதர செலவினங்களுக்கான உபயம் வரவேற்கபடுகிறது.
தேதி : 22/09/2025 நேரம் : மாலை 06:00
உபயதாரர் கட்டணம் ரூ 100/-
திருவிளக்கு பூஜை
ஊரக சிவன் கோவில் வளாகத்தில் உள்ள ஶ்ரீலலிதாபரமேஸ்வரி அம்பாள் சன்னதியில் பிரதி ஆடி மாத 3வது வெள்ளி கிழமை அன்று மாலை 06.00 மணிக்கு துவங்கி ஊரக மகளிர்களால் திருவிளக்கு பூஜை செய்யப்பட்டு, மஹா தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் வெகு சிறப்பாக நடைபெறும்.
இதில் கலந்து கொள்ளும் மகளிர் தங்கள் வீட்டில் இருந்து விளக்கு, விளக்கு வைக்க தாம்பாளம், பஞ்ச பாத்திரம், கற்பூரதட்டு மற்றும் மணி எடுத்து வரவும். தீபத்திற்கு எண்ணெய், திரி உட்பட அனைத்து பூஜை பொருட்களும் ஆலயத்தில் வழங்கப்படும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீலலிதாபரமேஸ்வரி அம்பாள் அருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேதி : 01/08/2025 நேரம் : மாலை 06:00
உபயதாரர் கட்டணம் ரூ 100/-
ஶ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஶ்ரீ நடராஜர் மூர்த்தி மற்றும் ஶ்ரீமாணிக்கவாசக சுவாமிகளுக்கு அபிஷேக வழிபாடு
பெல் ஊரக ஶ்ரீலலிதாபரமேஸ்வரி சமேத ஸ்ரீசந்திரமொலீஸ்வரர் ஆலய வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஶ்ரீ நடராஜர் மூர்த்தி மற்றும் ஶ்ரீமாணிக்கவாசக சுவாமிகளுக்கு ஆண்டு தோறும் முறையே
- சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரம்,
- ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரம்,
- ஆவணி மாதம் வளர்பிறை சதுர்தசி,
- புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்தசி,
- மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், (ஆருத்ரா தரிசனம்)
- மாசி மாதம் வளர்பிறை சதுர்தசி,
ஆகிய ஆறு தினங்களும் மாலை 06.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும், அது சமயம் ஊரக பக்தர்களின் கூட்டு நாமாவளியும் தொடர்ந்து, உபயதாரர் சங்கல்பம், சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீ நடராஜர் மூர்த்தி திருவருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் மாலை 06.00 மணிக்குள்ளாக சிவன் சன்னதியில் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேதி : பின்னர் அறிவிக்கப்படும் நேரம் : மாலை 06:00
உபயதாரர் கட்டணம் ரூ 100/-
கந்த சஷ்டிவிழா
ஊரக சிவன் கோவில் வளாகத்தில் உள்ள ஶ்ரீவள்ளி தெய்வயானை சமேத ஶ்ரீ சுப்பிரமண்யசுவாமி ஆலய கந்த சஷ்டிவிழாவை முன்னிட்டு, சஷ்டி விரத தினங்களான 7 நாட்களும் தினமும் காலை 09.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், அது சமயம் ஊரக மகளிர்களால் கந்த சஷ்டி கவசம் மற்றும் ஶ்ரீமுருகர் நாமாவளி துதிக்கப்பட்டு, உபயதாரர் சங்கல்பம் , சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும்.
சூரஸம்ஹாரம் தினத்தில் அன்று மாலை 05-30 மணிக்கு ஊரக பக்தர்களால் கந்த சஷ்டி கவசம் துதிக்கப்பட்டு சூரஸம்ஹாரம் நிகழ்ச்சியும், தொடர்ந்து அபிஷேகமும், அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் சிறப்பாக நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீவள்ளி தெய்வயானை சமேத ஶ்ரீ சுப்பிரமண்யசுவாமி அருளுக்கு பாத்திரமாகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சஷ்டி 7 நாட்களும் அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் காலை 09.00 மணிக்குள்ளாக ஸ்ரீமுருகர் சன்னதியில் சேர்த்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சூரசம்ஹாரம் தேதி : 27/10/2025 நேரம் : மாலை 06:00
உபயதாரர் கட்டணம் ரூ 100/-
ஶ்ரீவள்ளி தெய்வானை சமேத
ஶ்ரீ சுப்பிரமண்யசுவாமி திருக்கல்யாணம்
ஊரக சிவன் கோவில் வளாகத்தில் உள்ள ஶ்ரீவள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமண்யசுவாமி சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் சூரஸம்ஹாரம் நிகழ்ச்சி முடிந்த மறுதினம் மாலை ஶ்ரீவள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமண்யசுவாமிகள் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.
அதன் தொடக்க நிகழ்வாக மாலை 05.45 மணிக்கு சீர்வரிசையாக வெற்றிலை, பாக்கு, திருமாங்கல்யம், பழவகைகள் மற்றும் இனிப்பு வகைகள் ஶ்ரீஇரட்டை விநாயகர் சன்னதியில் வைத்து தீபாரதனை செய்யப்பட்டு, ஶ்ரீ இரட்டை விநாயகர் சன்னதியில் இருந்து ஊரக மகளிரின் சீர்வரிசை புறப்பட்டு, ஶ்ரீவள்ளி தெய்வானை சமேத ஶ்ரீசுப்பிரமண்யசுவாமி சன்னதி வந்தடைந்து திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறும்,
அதன் பின்னர் சுவாமி அம்பாள் சமேதராக ஊஞ்சல் சேவையும் தொடர்ந்து பிரசாத விநியோகமும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீவள்ளி தெய்வயானை சமேத ஶ்ரீசுப்பிரமண்யசுவாமி அருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
திருமாங்கல்யம், வஸ்திரம், திருக்கல்யாண பிரசாதம், புஷ்பம் மற்றும் இதர திருக்கல்யாண செலவினங்களுக்கான உபயம் வரவேற்கபடுகிறது.
தேதி : 28/10/2025 நேரம் : மாலை 06:00
உபயதாரர் கட்டணம் ரூ 100/-
திருக்கார்த்திகை தீப விழா
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி சமேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர் ஆலய வளாகத்தில் திருக்கார்த்திகை நிகழ்வை முன்னிட்டு ஆண்டு தோறும் திருக்கார்த்திகை தீப தினத்தன்று மாலை 06.00 மணிக்கு, ஆலய அனைத்து விமானங்களிலும் தீபம் ஏற்றப்பட்டு தொடர்ந்து சொக்கப்பனை ஏற்றப்படும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி சமேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர் திருவருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேதி : 03/12/2025 நேரம் : மாலை 06:00
சமயக்குறவர்கள் நால்வர் வழிபாடு
பெல் ஊரக ஶ்ரீலலிதாபரமேஸ்வரி சமேத ஸ்ரீசந்திரமொலீஸ்வரர் ஆலய வளாகத்தில் எழுந்தருளியுள்ள நால்வர் சன்னதியில் ஆண்டு தோறும் குருபூஜையானது முறையே
- திருஞானசம்பந்தர் சுவாமிகள் - வைகாசி மாதம் மூலம் நட்சத்திரம்,
- திருநாவுக்கரசர் சுவாமிகள் - சித்திரை மாதம் சதயம் நட்சத்திரம்,
- சுந்தரமூர்த்தி சுவாமிகள் - ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம்,
- மாணிக்கவாசகர் சுவாமிகள் - ஆனி மாதம் மகம் நட்சத்திரம்,
ஆகிய நான்கு தினங்களும் மாலை 06.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும், அது சமயம் ஊரக பக்தர்களின் திருமுறை பாராயணமும், தொடர்ந்து உபயதாரர் சங்கல்பம், சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சமயக்குறவர்கள் திருவருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் மாலை 06.00 மணிக்குள்ளாக நால்வர் சன்னதியில் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேதி : பின்னர் அறிவிக்கப்படும் நேரம் : மாலை 06:00
உபயதாரர் கட்டணம் ரூ 50/-